Sunday, 6 September 2015

பழகிவிடும்....

பிரிவு, சுகம், துக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி, துரோகம், அவமரியாதை, ஏளனம், சூழ்ச்சி, உபச்சாரம், மரணம்....

அனைத்தும் அனைவர்க்கும் பழகிவிடும்...

குறை கண்டு உளம் குமுறாது
நிறைகண்டு மகிழ பழகினோம்..

நிதானத்தை இழந்தபோதும்
நிகழ்வுகளை கண்டு அஞ்சினோம்..

நமக்காக வாழாது
பிறர்க்காக நடித்தோம்...

நடப்பவற்றை உணராது
நடைபிணங்களாய் வலம் வந்தோம்....

மறத்துப்போன மானிடராயிற்றே...!!!

பாதிக்காதது மறந்துபோகும்
மற்றவை நம்மோடு மடிந்துபோகும்....!!!!!

Sunday, 30 August 2015

அப்துல் கலாம்....

கலாம்..
முலாம் தேவைப்படாத கலாம்..
உன்னால் எங்களுக்கு பெருமை...
நீயின்றி இனி வெறுமை..
இளைய சமுதாயத்தை கவர்ந்தாய்..
இளைஞர் மத்தியில் மடிந்தாய்..
உன்னைப் இழந்து வாடும் தேசம்..
என்றென்றும் மாறாது எங்கள் நேசம்..

Sunday, 23 February 2014

ஞானசெறுக்கு....!!!!



என் எண்ணங்களை சொன்னேன்... செவிசாய்க்கவில்லை
என் சிந்தனைகளை பார்த்து... பொறாமைபட்டனர்
என் ஆசைகளை தெரிவித்தேன்.. நடைமுறையில் சாத்தியமில்லை என்றனர்
அவர்களின் செயல்களை விமர்சித்தேன்... தலைகனம் என்றனர்
தவறுகளை சுட்டிக்காட்டினேன்... ஆணவம் என்றனர்
அவர்கள் இயலாமையை வெளிப்படுதினேன்... துணிவை விமர்சித்தனர்
கட்டுபாடுகளை புகுத்தினேன்.... வதந்திகளை பரப்பினர்
முனைப்போடு செயல்பட்டேன்... ஓரம்கட்ட முனைந்தனர்
ஒருவரும் உணரவில்லை... என் எண்ணவோட்டம் என்ன்னவென்று..
என்று புரியும் உங்களுக்கு...?? என்னை பற்றிய உங்கள் புரிதல் தவறென்று..
எனக்கிருப்பதோ பாரதி சொன்ன ஞானசெறுக்கு....!!!!